Thursday, April 2, 2015

சார்வி எண்கணிதக்கலை ஆராய்ச்சி மையம்


CNRC பற்றி :-
 

சார்வி எண்கணிதக்கலை ஆராய்ச்சி மையம், மக்களின் எல்லாப் பரிமாணங்களிலும்  பகுத்தாய்வு செய்யவே அர்ப்பணிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1990.    இந்த ஸ்தாபனத்தின் முக்கிய மையப்புள்ளி, எல்லா வகையிலும், எண்களும், எழுத்துக்களும் எப்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை ஒவ்வொரு சிறு நுணுக்கங்களையும் ஆராய்ந்து, மக்கள் ஏமாறாது நல்லவழியில் செலுத்தக்கூடிய ஆலோசனையுடன் கூடிய எண்ணாதிக்க ஆராய்ச்சி! இந்த மையம் ஆரம்பித்து இதுநாள் வரை சுமார் 6700 நபர்கள் வரை பூரணத் தெளிவுடன், பலதரப்பட்டப் பிரச்சனைகளை தீர்த்து, அவர்களையும், உள்ளுணர்ந்து தெளிவடைய வைத்திருக்கிறது. இந்த சார்வி ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஆராய்ந்து, ஆலோசனை வழங்கி, அவர்கள் மீது அதீத அக்கறை எடுத்து கவனிக்கிறது. தனிப்பட்ட இரகசியங்களும் பாதுகாக்கப் படுகிறது.
 

எண்கணிதக்கலை வித்தகரைப்பற்றி:-
 

இந்த எண்கணிதக்கலை வித்தகர் திரு.எம் எஸ் சேர்வராயர் ஆரம்பகால கல்வி நிலையில் Textile Designing படிப்பை 1976ல் சிங்கப்பூரில் முடித்துள்ளார். இவர், இந்த இடைப்பட்ட காலத்தில் ( 1975 -76 ) Prof.D.R.ஆல்பன் ரொட்ரிக்கோ என்ற மாமனிதரால், எம் எஸ் சேர்வராயர் அடையாளம் காணப்பட்டு "Numerology"எனும் எண்கணிதக்கலையை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் மேம்படுத்தப்பட்ட பூரண நிலையிலான பயிற்சியும் எம் எஸ் சேர்வராயர் முடித்தார்.  இதன்பின், இந்த 
 http://img.dpauls.com/cms/images/cityinfo/0923457_Singapore_Merlion.jpg
எண்கணிதக்கலையின் (Numerology) பல்வேறு நுணுக்கங்கள், நிலைகள், ஆராய்ச்சிக்குரிய எண்களை, அதன் நடப்புகளை ஆராயக்கூடிய நுண்ணிய கலைகளை, அவற்றின் மர்ம முடிச்சுக்களை Prof.D.R.ஆல்பன் ரொட்ரிக்கோ  அவர்களின் குரு மரியாதைக்குரிய Dr.ஆப்ரஹாம். T.கோவூர் எனும் பகுத்தறிவுச் செம்மல் மற்றும் மனோதத்துவ நிபுணர் அவர்களிடம் கற்றுத் தெளிவடையும் சந்தர்ப்பம் எம் எஸ் சேர்வராயருக்கு கிடைத்தது. Dr.ஆப்ரஹாம். T.கோவூர் ஸ்ரீலங்கா பேராதெனிய பல்கலைக் கழகத்திலும், கொழும்பு மவுண்ட்லெவெனியா புனித தோமையர் கல்லூரியிலும் பணியாற்றியவர்.
 
http://people.eng.unimelb.edu.au/malkah/Pera91/EngineeringFaculty.jpg
எண்கணிதக்கலை (Numerology)பற்றி
 

இந்தக்கலை புராதனமானது. அறிவுபூர்வமான பயிற்சிக்கலை. எண்களுக்கும், எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு, சப்த அலைகள், கதிர்வீச்சுக்கள் இவைகளை கணித்து,ஒரு நபர் பிறந்த தேதியின் எண்களை எப்படி தொடர்கிறது, ஆளுகிறது என்பதை தொடர்புப்படுத்தி நுணுக்கி, கணிக்கிறது. குறிப்பிட்ட நபரின் ஆளுமைக்குரிய எண்கள், எழுத்துக்கள் அந்த நபரை உள்ளுணர்வாக எப்படி அதிர்வுகளை ஏற்படுத்துகிறது ? மூளையை, மூளை சார்ந்த பகுதிகளை இயக்குகிறது. இயக்கவில்லை என்றால் எப்படி அவைகளைத் தூண்டுவது. அந்த நபரின் சுற்று, சூழ்நிலை, குடும்பப் பின்னணி இவைகளை ஆராய்ந்து, அந்த நபர் நினைக்கும் குறிக்கோளை அடைய எப்படி தயார்படுத்துவது என்பதை இந்தக் கலை செய்கிறது. இந்த ஆராய்ச்சி மையம் 9 கிரகங்களை மட்டும் வைத்து மற்றவர்கள் போல் கணிக்காமல், 10 கிரகங்களை,( பூமியையும் சேர்த்து ) தனது கணிப்பில் எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு தனிநபருக்கும் கிரகங்களின் ஆளுமை, பாதிப்பு, அதிர்வுகளை கணக்கெடுத்து அந்தந்த நபர்களின் பிறந்ததேதி, கூட்டெண், நேரம், இடம், பெயர் இவைகளின் தொடர்புகளைக் கணிக்கிறது.
 

இந்த எண்கணிதக்கலை (Numerology) ஒருவரது எதிர்காலத்தை மட்டும் கணிப்பது கிடையாது. ஒரு நபரின் குணம், குறிக்கோள், அடிப்படைத் தகுதிகளை மேம்படுத்தி அவர்களே அறியாத, எதிர்பார்க்காத, எதிர்காலத்தை தூண்டி விடுகிறது. இது மட்டும் அல்லாது அந்தந்த நபர்களின் எண் ஆதிக்கப்படி வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது. இது மூளைத்திறன், மூளை சார்ந்த பகுதிகளின் பலம் இவைகளின் துணை கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
 

எண்கணிதக்கலையைப் புரிந்துகொள்ள / சார்வியைப்பற்றி தெரிந்துகொள்ள
 

சார்வி ஸ்தாபனம் எண்கணிதக்கலையை மையமாகக் கொண்டு செயல்புரிகிறது.  எண்கணிதக்கலை (Numerology) ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கைக்கல்வி! அதையும் முழு மனதோடு புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
 

பெயர் என்றால் என்ன ?
 

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் பிறந்த தேதி, நேரம் மட்டுமே அந்த உடலுக்கு         ( Physical body / Soul ) உரியதாக அமைகின்றது. இந்த நடமாடும் உடலுக்கு ஒரு  அங்கீகாரமும், அடையாளமும் கிடைக்க, சமுதாயத்திற்கு மத்தியில் அறிமுகமா வதற்கே 'பெயர் '. அதன்பின், இந்தப் பெயர் முழு உடலையும் ஆக்கிரமித்து மூடிக் கொள்கிறது. பிறப்புச் சான்றிதழ், பள்ளிக்கூட, கல்லூரிச் சான்றிதழ்கள், ஓட்டுனர் உரிம அத்தாட்சி சான்றிதழ், வங்கிக்கணக்கு இவைகள் போன்ற பகுதிகளில் இந்தப் பெயர்  பொறுப்பு, நம்பிக்கை, அடையாளம் காட்டுதல், அங்கீகாரம் என்ற வகையில் இந்த உடலுக்கு தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.இந்தப் பெயரே ஆண், பெண் என்று பாகுபாடு செய்து உதாரண குணமாக அமைகிறது. சமுதாயத்தில் பலவித நற்காரியங்களைச் செய்து அந்தப் பெயரை வெளிக் கொணர்வது, பெயர் கெடாமல் கௌரவம், தகுதியை ஏற்படுத்திக்கொள்ளவும் முயல்கிறது.
 

பெயரின் சக்தியைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்
 

நாம் எங்காவது அவசரப் பணத் தேவைக்காக, பணப் பரிமாற்றத்திற்காக நிதி சம்பந்தமாக ( Bank, Finance ) ஒரு ஸ்தாபனத்திற்குச் சென்று, அழகான தோற்றம், பலமான உடலமைப்பு, நல்ல நடவடிக்கை, நான் எல்லா வகையிலும் மேம்பட்டவன் என்று கூறி இந்த உடலை அடமானமாகக் காட்டி, கடனாக ஒரு தொகை கடனாகக் கேட்டால், பைத்தியக்காரத் தனமாக விமரிசிக்கப் படுவோம் இல்லையா ? ஏனெனில், அந்த ஸ்தாபனத்திற்கு இதில் எந்தத் தகுதியும் தேவைப்படாது. சமுதாயம் இந்த உடலுக்கு எந்த உயர்ந்த மதிப்பும் தருவதில்லை. ஆனால், கண்ணால் பார்க்கமுடியாத  'பெயருக்கு' அந்தப் பெயரைத் தாங்கி நிற்கும் சான்றிதழ்களுக்கு கோடிக்கணக்கில்  மதிப்பிடத் தயாராக இருக்கிறார்கள். அப்படியானால் பெயருக்குத்தான் மதிப்பா ? இடையில் வந்த பெயரைக் காப்பாற்றத்தானே நீதி, நேர்மை, நியாயம், சமுதாயம் அனைத்திற்கும் பயப்படுகிறோம். பெயருக்கே இவ்வளவு பலம் இருக்குமானால், நமது உடலில் என்னபலம், சக்தி இருக்கும் என்று சிந்தித்தோமா ? இந்த உடல் தகுதி காவல்துறை, இராணுவம் போன்ற துறைகளுக்கு மட்டுமே ஓரளவு உதவும். வலுவான உடல் அழகு கொண்ட ஆணழகர்கள் எவராவது பிரதமராக, ஜனாதிபதி யாக அல்லது உயரிய பதவிகளை வகிக்கிறார்களா ? இல்லை ! உடற்பயிற்சியால் வலுவுடைய எவராவது உயருகிறார்களா ? இல்லை ! ஆனால் சமுதாயத்தி லுள்ள உயர் பதவி வகிப்பவர்களுக்கு கீழ் மெய்ப்பாதுகாவலர்களாக, இட்ட வேலை யைச் செய்யும் ஏவலாளர்களாக இயங்க மட்டுமே இந்த உடல் பலம் உதவுகிறது.
 

ஏதோ ஒரு பலம்,  ஒரு உயர்ந்த சக்தி உயரச் சென்றவர்களிடம் இருப்பதாக எண்ணுகிறோமே, ஏங்குகிறோமே அது என்ன சக்தி ? என்ன பலம் ? அரசியல், ஆன்மீகம்,  அறிவியல், சினிமா, தொலைக்காட்சி போன்ற வற்றில் உயர்ந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சக்தியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறோமே, அது என்ன சக்தி என்று தெரியாமல் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.
 

மூளையின் திறன், பண்பு இவைதான் ஒரு மனிதனை மேம்படுத்துகிறது. தகுதியை உயர்த்துகிறது. உயர்ந்த பதவிக்கு வருவதோ நடக்கிறது. மூளைத்திறன் இயற்கை யாகவே கண்டுபிடித்து, அதன் பலத்திற்கேற்ப திறனை அதிகப்படுத்துவது அவசியம். மூளைதான் ஒரு மனிதனை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை, ஒரு உலகத்தை இயக்குகிற சக்தி படைத்திருக்கிறது.
 

எண்களையும், பெயரையும் ஆராய்ந்து பெயரை பலப்படுத்தினால் சமுதாயத்தையும், பார்வையாளர்களையும் வசீகரிக்கமுடியும். இந்த எண்கணிதக்கலையையும் துணை கொண்டு, தெரிந்து பயன்படுத்தினால், பெயர், உடல், ஆன்மா, சமுதாயம் ஆகியவைகளை அதன் அலைவரிசை தெரிந்து, இணைய வைக்கிறது. இது சரியான முறையில் பயன் படுத்தும் போது சமுதாயத்தையும், பார்வையாளர்களையும், நம்மை பின்பற்று வோர்களையும் ஈர்த்து சரிநிலையில் வைக்கிறது. உடல்பலத்திற்கு வரையறையுண்டு. ஆனால், மனத்திறமை என்ற மஹாசக்தி எங்கிருந்து கிடைக்கிறது என்றால்,  மூளை என்ற அகண்ட மஹா சமுத்திரத்தில் என்பதுதான் நிதர்சனம்.
 

ஒரு சாதாரண வானொலிப் பெட்டியை ( Radio )எடுத்துக்கொள்வோம்.  Delhi யில்   இருந்து  ஒலிபரப்பப்படும் ஒலிஅலை / Frequency நமது ஊரில் உள்ள ஒரு  Tower மூலமாக இழுத்து Radio என்ற Receiver க்குத் தந்தால்தான் நாம் கேட்க முடியும். ஒரு நேரத்தில்  ஒரு Channel மட்டுமே Receive பண்ண முடியும். Delhi Radioவை Receive பண்ணினால் Chennai Channelகிடைக்காது. Chennai கிடைத்தால்  Delhi கிடைக்காது. இங்கே பெயர் என்பது Tower என்பது போல, Tower ஐ மட்டுமே Paint அடித்து அழகுபடுத்திவிட்டால் மட்டும் Radioவால் Receive செய்யமுடியாது. Delhiயோ, Chennaiயோ Broadcast செய்த Frequency கிடைத்தால் மட்டுமே Tower எடுத்துத் தரமுடியும். எமது உடல் எனும் Container ல் இருந்து, ஏதோ ஒரு Power ஐ அனுப்பினால்தான், Name என்ற Tower எடுத்து, சமுதாயம் என்ற Receiverக்கு தரமுடியும்.
Numerology என்பது உடலுக்கும், பெயருக்கும் இடையிலான சப்த அலைகளும், ( Frequency )  பெயருக்கும், சமுதாயத்திற்கும் இடையிலான சப்த அலைகளும், ( Frequency )  சீராக அமைந்துள்ளதா என்று கண்டு பிடிப்பதே ! பெயரை மட்டும் மாற்றி அமைப்பது, Tower க்கு  Paint அடிப்பது போல, பெயர் என்பது சமுதாயத்தை சமாளிக்க, அல்லது அறிமுகமாக ஒரு Visiting Card தான் ! பொறுமையாகப் படித்தீர்களா ?
 

சரி ! அப்படியானால் நமது உடலில் ( Container ) என்ன சக்திதான் இருக்கிறது என்று பார்ப்போம். உடல் பலத்தால் மட்டும் எல்லாவற்றை யும் சாதித்துவிட முடியாது. ஆனால், உடல் அவயங்களை இயக்கும் தலைமை செயலகமான மூளை, அந்த மூளை தரும் மனோபலத்தால் எதையும் சாதிக்க முடியும். அப்படியானால், மூளையில் என்ன பலம், என்ன திறன் இருக்கிறது ?
 

மூளை நமது உடலில் உள்ள அத்தனை அங்கங்களையும், உறுப்பு களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும் இரவு, பகல் என்று வாழ்நாள் முழுவதும் அத்தனை இயக்கங்களையும் இந்த மூளையே தீர்மானித்து வழி நடத்துகிறது. இந்த மூளைக்கு இந்த சக்தி எங்கிருந்து வருகிறது என்றால், எண்ணற்ற கோடித் துகள்களாக வியாபித்து இருக்கும் மூளையின் சிற்றறைகளில் ( Brain Cells ) இருந்து ஒவ்வொரு கணத்திலும் மின்சார அதிர்வு பொறிகள் மூலமாக மூளைக்கு சக்தியைத் தருகிறது.இதுவரை மூளையின் 1/3 பகுதியை மட்டுமே நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. அதுவே 115 கோடி Cells என்று கணக்கிடப்படுகிறது. இந்தக் கோடிக்கணக்கான சிற்றறைகளில் இருந்து  ஒவ்வொரு நாளும் 10,000 Cellகள்   வழிந்து ( Over Flow ) தயார்நிலைக்குத் தள்ளப்பட்டு செயலாற்றுகிறது. இந்த 10,000 Cells களை வைத்துத்தான் ஒரு மனிதனின் அத்தனை இயக்கங்களும் தினமும் நடைபெறுகின்றன. கணக்கிடுவது, சிரிப்பது, பேசுவது, சண்டையிடுவது, அழுவது, சாப்பிடுவது, இன்பம் அனுபவிப்பது என்று அன்றாட செயல்களில் இதிலிருந்தே செலவிடுகிறோம். ஒருதடவை புகைபிடித்தால் ( Cigarette ) 200 Cellகள் இறந்து விடுகின்றன.ஒரு தடவை மது  ( Alcohol )அருந்தினால் 2000 Cells இழக்க நேரிடும். ஒருதடவை மூளை கட்டுபாட்டை இழந்து, கோபப் பட்டு, எதையாவது தூக்கிப் போட்டு உடைக்கும் அளவிற்கு நிதானம் இழந்தால், 2000 Cell களை இழக்கிறோம். ஒரு தடவை உடலுறவில்  ( Sexual Inter course )  ஈடுபடும்போது சுமார் 6000 Cell களை இழக்க நேரிடுகிறது. ஆக, Cell களை செலவு செய்ய பல வழிகளை, நிகழ்வு களை  நம் வாழ்வில் வைத்திருக்கிறோம்.  ஆனால், Cell களை  மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமலேயே வாழ்வை முடித்துக்கொள்கிறோம் .மூளைத்திறனுக்காக பல பயிற்சிகள் இருந்தும் ஏதாவது பயிற்சி மூலமாக Cells எண்ணிக்கை களை உயர்த்துகிறோமா என்றால் எல்லோருக்கும் அது ஒரு பெரிய கேள்விக்குறி !
 

இதற்கு பல வழிகள் இருக்கின்றன. தியானம், காயகல்ப பயிற்சி, ஆழ்நிலை தியானம், இராஜயோகம், அகத்தாய்வு பயிற்சி, தவப்பயிற்சி, ஆல்பா நிலை, குண்டலினியோகா என்று பலவகைகள் இருக்கின்றன. ஐம்புலன்களை கட்டுப்படுத்தி செய்யும் இது போன்ற பயிற்சிகளில் மூளைத்திறன் ( Cells ) அதிகரிக்கிறது. இப்படித் திறன் அதிகரித்தவர்கள் சமுதாயத்தில் முக்கிய மனிதர்களாக, மதிக்கும் மனிதர்களாக, நடிகர்களாக, அரசியல்வாதிகளாக, ஆன்மீகவாதிகளாக, தொழிலதிபர் களாக, விஞ்ஞானிகளாக மேலே உயர்கிறார்கள். இப்படி மூளைத் திறனை அதிகப் படுத்தியவர்கள் தலைமைப் பதவிக்கு, அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் உயர்ந்து வந்திருக்கிறார்கள். மகான்கள், புனிதர்கள், சித்தர்கள் அதீத பயிற்சிகள் மூலமாக 5,00,000 Cells வரை அதிகப்படுத்தி காட்டியிருக் கிறார்கள். நம்மைப்போலவே மனிதர்களாக ஒரு தாயின் வயிற்றில் உதித்து, வளர்ந்து, உண்டு, உறங்கி இருந்தாலும் கடுமையான தவ நிலை யில் குறைந்தது 50 லட்சம் Cells வரை அதிகப் படுத்திய இறைதூதர்கள், ஞானிகள் மறைந்தாலும், நிரந்தரமான வர்களாக, சிரஞ்சீவிகளாக இன்றும் திகழ்கிறார்கள்.
 

எண்கணிதக்கலை / Numerology ஒருவகையில் விஞ்ஞானம். இது பின்னிப் பிணைந்து கிடக்கும் எண்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்தி மூளையை பயிற்சிக்கு உட்படுத்தி, ஒரு அபரிமிதமான வெற்றியை அடைய வைக்கிறது. இது இலக்கை நோக்கி, குறிக்கோளை வைத்து தினசரி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தூண்டக்கூடியதாக மூளைத்திறன் மற்றும் பெயர்களின் தொடர்புகளை பலப்படுத்து கிறது. 
 

எண்கள், கையெழுத்து, எதிர்காலம் ( Numer, Grapho and Future ) இவைகளை மையப்படுத்தி பயிற்சிகள் மூலமாக, மூளைத்திறன் அதிகரிக்கப்பட்டு தொழில், பதவி, ஜீவனம் ஆகிய பகுதிகளில் வெற்றியைத் தருகிறது. இது முடியும் என்பதற்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த மாத,வருடம், கையொப்பம், பிறந்த நேரம், பிறந்த இடம் இவைகளின் கலவையான கணக்கீட்டில், மிக நுணுக்கமான, அபரிமிதமான பலன்களை துல்லியமாக கணக்கிடப்படுகிறது. பிறந்த தேதி முழுவிபரமே இந்தக் கணிதக்கலைக்கு அடிப்படையாக அமையும்.
 

உதாரணமாக1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களை 1ம் எண்காரர்கள் என்று சொல்லுவோம். இது எப்படி வகையாக (Type) பிரித்துக் கணக்கிடப்       படுகிறது என்றால், ( Eg: 1.1.1997=1+1+1+9+9+7= 28=2+8=10=1+0 = 1 ) இது ஒரு இணைப்பு (1-1) எண் என்றால், இதே 1ம் எண்ணில் மேலும் 8 இணைப்புகள் இருக்கின்றன.                (1-2,1-3,1-4,1-5,1-6,1-7,1-8,1-9) மேலும் (1,10,19,28),(2,11,20,29),(3,12,21,30),(4,13,22,31),(5,14,23),(6,15,24),(7,16,25),(8,17,26),(9,18,27) இதேபோல இவ்வளவு தேதிகளுக்கும் இணைப்பு எண்கள் இணைக்கப் பட்டால் 279 வகைகள்  (Type) பிரிகின்றன. இதேபோல் பிறந்தநேரம் ஒருநாளைக்கு 4 மாதிரி ( Model )களாக பிரிகின்றன. 1வது மாதிரி: 12.01 am to 6.00 am / 2வது மாதிரி: 6.01 am to 12.00 Noon / 3வது மாதிரி: 12.01 pm to 6.00 pm / 4வது மாதிரி: 6.01 pm to 12.00 Mid night எனப் பிரிகின்றன. அப்படியானால் 279 வகை களும்  (Type), 1116 மாதிரி( Model )களாக தரம் பிரிகின்றன. இவ்வளவு நுணுக்கமாக பிரித்துப் பார்க்கும்போது பொதுப்பலன்களாக 1ம் எண் காரர்கள் இப்படி என்று பொதுப் படையாக சொல்லிவிட முடியாது.
 

உதாரணத்திற்கு 1.10.1982 மாலை 7.35 க்குப் பிறந்தவரை கணக்கிடும்போது
தேதி: 1
வகை (Type): (DOB Total) 1+1+0+1+9+8+2 = 22 =2+2 = 4
மாதிரி ( Model ):( Time of birth ) 7.35 pm (4வது மாதிரி: 6.01 pm to 12.00 Mid night)
 

எண்கணிதக்கலை (Numerology) பயிற்சிகள்:-
 

இந்தக் கலைப் பற்றிய பல பயிற்சிகள் இருக்கின்றன. எதற்காக என்றால் பலதரப்பட்ட, பலமுனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக பயிற்சிகள்.  தொழில், நிதி நிலைமை சீராக்க, எதிர்மறை எண்ணங்கள் மறைய, நடவடிக்கைகளை ஏதுவாக மாற்றம் செய்ய, தனிப்பட்ட ஆலோசனை மற்றும் செயல்புரியத் தூண்டுதல் மூலமாக குழந்தைகளை வழிநடத்துதல், கணவன், மனைவி கருத்து வேறுபாடுகளை களைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்தல், பிரிந்த உறவுகளை சேர்த்தல், தடைகளை பின்னடைவு இல்லாமல், இலக்கை நோக்கிச் செலுத்துதல், தாழ்வு மனப்பான்மை நீக்கி நேர்மறை (Positive)எண்ணங்களால் மூளையை நிறைக்கச் செய்தல்.
சார்வி எண்கணிதக்கலை ஆராய்ச்சி மையம், 7 நிலைகளில் பயிற்சிகளையும், மேலும் இதர முக்கிய பயிற்சிகளையும் தருகிறது
 

முதல்நிலை ( First Stage ): தனிப்பட்ட நிலையில் தமது சக்தியைக் கூட்டி, தன் பலம் உணர்ந்து, தன்னைச்சுற்றி 150 பேர் வரை ஆளக்கூடிய அதிர்வு சக்தியை ஏற்படுத்துதல். இந்தப் பயிற்சி நிலை இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
 

இரண்டாம் நிலை ( Second Stage ): 150 பேர் முதல் 1,00,000 நபர்கள் வரை வசீகரிக்கச் செய்யும் இந்தப் பயிற்சி நிலை.
 

மூன்றாம் நிலை ( Third Stage ): இந்தப் பயிற்சி தொழில், வியாபாரம், பதவி சம்பந்தமான ஸ்தாபனங்கள்,கூடங்கள், நிலையங்களை ஓரிடத்தி லிருந்து 750 கிலோ மீட்டர் வரை அதிர்வு அலைகளை அனுப்பி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
 

நான்காம் நிலை  ( Fourth Stage ): (CS) இது தேவைப்படுமாயின்,மிக முக்கிய மானவர்களுக்கு, மிகுந்த கட்டுப்பாடுடன் வழங்கப்படுகிறது. (அதனால் விளக்கம் இல்லை )
 

ஐந்தாம் நிலை ( Fifth Stage ): (PPP) சொத்துக்கள்,விரிவுபடுத்தல், பாதுகாத்தல்.
 

ஆறாம் நிலை ( Sixth Stage ): (TEX) அறிவை மேம்படுத்த ஆணோ,பெண்ணோ அவர்களது மூளைத்திறனை ஸ்திரப்படுத்தும் பயிற்சி.
 

ஏழாம் நிலை ( Seventh Stage ): (EMP) உள்ளே அடங்கி இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு அவைகளைத் தூண்டி மேலும் பிரகாசிக்கச் செய்யும் பயிற்சி.
 

மற்றையபயிற்சி நிலைகள்:-
 

குழந்தைகள் பெயர்,பழையப்பெயரை திருத்தி புதிய பெயர் சூட்டுதல், வியாபாரம், ஸ்தாபனம் பெயர்கள்தெரிவு, இதுமட்டுமல்லாது அரசியல்சம்பந்தமான, சினிமா சம்பந்தமான நிபுணத்துவர்களுக்கு ஏற்றம் தரும் பயிற்சிகள், மற்றும் ஊக்குவிக்கும்  (Booster) பயிற்சிகளில் Lafty, Normal என்று இரு பிரிவுகள்.
 

இந்தப்பயிற்சி Cells அணுக்களைத் தூண்டி எண்கள், எழுத்துக்கள் மூலமாக அறிவு பூர்வமான கடலளவு மாற்றங்களைக் கொண்டு வந்து வாழ்க்கையின்  போட்டிகளை ஆரோக்கியமாக எதிர்கொள்ள வைத்து வெற்றியடையச்  செய்கிறது.
இந்த எண்கணிதக்கலை ( Numerology ) பயிற்சியில் எந்த நிலைக்குச் செல்வதானாலும் அடிப்படையாக 1ம்,2ம் நிலைகள் (1st,2nd Stages ) இருக்க வேண்டும்.இந்த நிலைகளை ( Stage ) தவிர்த்து வேறுநிலைப் பயிற்சிகள் செய்ய முடியாது.
எண்கணிதக்கலை / Numerology   பின்பற்றும் அன்பர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்:
* எண்கணிதக்கலையென்பது, எண்களும்,எழுத்துக்களும் சேர்ந்து செய்யும் ஜாலம் மட்டுமே.
* இதற்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. தயவு செய்து இவ்விரண்டையும் போட்டுக் குழப்பக்கூடாது.
* பரிகாரம், யாகம், வேள்வி, மறுதாலி, மறு திருமணம் போன்ற சடங்குகள் இதில் இல்லை.
* இந்த எண்கணிதக்கலை ( Numerology ) தனிப்பட்ட ஒரு மதத்தைச் சார்ந்தது அல்ல.
தெளிவாக, சிந்தித்து செயல்பட வேண்டும்.


இப்பயிற்சிக்கு தேவையான விபரங்கள் / மற்றும் தொடர்புக்கு:-
 சார்வி எண்கணிதக்கலை ஆராய்ச்சி மையம்

1 comment:

Positive Energy Articles said...

Sharing the insight. You've given me a lot to think about.